×

வேகமெடுக்கும் தொற்று பரவல்!: புதுடெல்லியில் இருந்து 2 விமானப்படை விமானம் மூலம் 3 டன் அளவிலான மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன..!!

சென்னை: டெல்லியில் இருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 3 டன் அளவிலான மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தடைந்தன. இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் கோரோனா 2ம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழக அரசு போர்க்கால  அடிப்படையில் வரவழைத்து கொண்டு இருக்கிறது. 


தமிழக அரசின் இந்த தீவிர நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப்படை விமானங்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 3 டன் மருத்துவ உபகரணங்கள் சென்னை பழைய விமான நிலையத்தை வந்து சேர்ந்தன. இதில் 68 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள், 45 வெண்டிலேட்டர்கள், ஒரு லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள், 2 லட்சம் முகக்கவசங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானப்படை வீரர்களின் கண்காணிப்பில் இந்தியன் ஏர்லைன்ஸ் நூடர்கள் மருத்துவ உபகரணங்களை இறக்கி விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவற்றை விமான நிலைய அதிகாரிகள் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனிடையே அடுத்த சில தினங்களில் மேலும் சில விமானங்களில் டெல்லி மற்றும் நாக்பூரில் இருந்தும் பெருமளவில் மருத்துவ உபகரணங்கள் வரவிருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



Tags : Chennai ,New Delhi ,Force , New Delhi, Air Force aircraft, medical equipment, arrived in Chennai
× RELATED அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி