×

கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

நாகை : நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் கொ ரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன் தொடங்கி வைத்தார். நாகை தாசில்தார் ஜெயபாலன், டிஎஸ்பி சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஆரூர் நாடக கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.

இதில் எமதர்மன் சித்திரகுப்தன் வேடம் அணிந்தவாறு நாடக கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது முககவசம் அணிந்து வெளியே வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றை உலகத்தை விட்டு விரட்டலாம். அனாவசியமாக வெளியே வந்தால், எவ்வாறு மனிதர்களை வைரஸ் தொற்று தாக்கும் என்பது குறித்து நாடகம் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து நாகை அபிராமி அம்மன் சன்னதி தெரு, நாகூர் பஸ்ஸ்டாண்ட் ஆகிய இடங்களிலும் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

Tags : Corona ,Concert , Nagai: Awareness play was held at the new bus stand in Nagai to control the Corona virus infection.
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...