கொச்சி அருகே கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். கொச்சி அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது டவ்-தே புயலில் சிக்கி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் மாயமாகினர். எனவே அவர் குடும்பத்தினர் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர்களை விரைந்து கண்டறியும் வகையில் கடற்படை, விமானப்படை மூலம் மீனவர்களின் இருப்பிடத்தை அறிந்து உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த டவ்தே புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு ஏழு பேர் பலியாகினர்.