கடைகளில் அலைமோதும் கூட்டம் கொரோனா பரவலை மேலும் அதிகப்படுத்தும்: டிடிவி தினகரன் கவலை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டர்: தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது. நோயின் பாதிப்பு அதிகமாகிறது என்று கூறிவிட்டு, அனைத்து கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்.சிறப்பு பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்? நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று பாதிப்பு அனைத்து ஊர்களுக்கும் பரவி விடாதா? ஏற்கனவே காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அவசியமின்றி வெளிவந்தவர்களை கட்டுப்படுத்தாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரியான திட்டமிடுதல் இன்றி குழப்புவது ஏன்?

Related Stories: