×

கோயில்களில் இருந்து உணவு பொட்டலம் பெற்று கலெக்டர்கள் வழியாக மருத்துவமனைகளில் மக்களுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள அன்னதான திட்டம் நடைபெறும் கோயில்களில் இருந்து நாள்தோறும் உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, கோயில்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் தேவைப்படும் நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்துறை பணியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், தொற்று நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு  அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 * கோயில்களில் தயார் நிலையில் உள்ள உணவு பொட்டலங்களை கோயில்களில் இருந்து பெற்று மருத்துவமனைகளில் விநியோகம் செய்ய, இணை ஆணையர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரை நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்று அதன்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 * அன்னதானம் தயார் செய்யும் கோயில் பணியாளர்கள் மற்றும் உணவு பொட்டலங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் இத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் முககவசம், கையுறை, கிருமி நாசினி உடன் கூடிய பிபிஇ கிட் வழங்கப்பட்டு அதனை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 * முதுநிலை கோயில்களில் அந்தெந்த கோயில் அலுவலர்களும், இதர கோயில் மண்டல இணை ஆணையர்களுக்கு இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Charitable Trusts Commissioner ,Kumarakuruparan , Arrangements to get food parcels from temples and distribute them to people in hospitals through collectors: Charitable Trusts Commissioner Kumarakuruparan Order
× RELATED கோயிலுக்கு கிடைக்கும் வருவாய்...