×

பல்லுயிர் பரவல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட ராமநாதபுரம் வனச்சரகருக்கு தேசிய விருது

ராமநாதபுரம்: பல்லுயிர் பரவல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட ராமநாதபுரம் வனச்சரக அலுவலருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் ஒன்றிணைந்து 2012ம் ஆண்டு முதல் பல்லுயிர் பரவல் பாதுகாப்பில் சிறப்பாக பணிபுரியும் தனிநபர், நிறுவனங்கள் மற்றும் பல்லுயிர் மேலாண் குழுக்களுக்கு இந்தியா பல்லுயிர் பரவல் விருது வழங்கி வருகிறது.
நாடு முழுவதும் 5 பிரிவுகளின் கீழ் 7 விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில் ராமநாதபுரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 2017ம் ஆண்டு முதல் வனத்துறை செயல்படுத்தும் காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் கடந்த 3 ஆண்டுளாக காரங்காடு சூழல் மேம்பாட்டு குழு வளர்ச்சிக்கு சிறப்பாக களப்பண, சதுப்பு நிலக் காடுகளின் வளங்களை நிலையாக பயன்படுத்தி கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்தியதற்காகவும் உயிரியல்வளங்களை நிலையாக பயன்படுத்துதல் பிரிவின் கீழ் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், கொரோனா காரணமாக, ெ்டல்லியில் இருந்து இணையதளம் வாயிலாக நடந்த விழாவில், அவருக்கு மத்திய அமைச்சர் தேசிய விருதை வழங்கினார்.

Tags : Ramanadhapura Wildlife , Ramanathapuram Wildlife Sanctuary National Award for Outstanding Achievement in Biodiversity Conservation
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை