×

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் ஜூன் 18ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்தியா, 2வது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் நடப்பதால் பட்டம் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த போட்டியை காண சுமார் 4 ஆயிரம்  ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகளில் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் கவுண்டி போட்டிகளில் தற்போது ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீத டிக்கெட்டை (2 ஆயிரம் பேர்) ஐ.சி.சி. அதன் ஸ்பான்சர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்காக எடுத்துக்கொள்கிறது. மீதமுள்ள 2 ஆயிரம் டிக்கெட் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதனிடையே இந்த இறுதிப் போட்டிக்கான விளையாட்டு நிலைமைகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது….

The post இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : India ,New Zealand ,Test Champion Ship Final ,London ,World Test Championship Finals ,England ,Southamton Ground ,Dinakaran ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.