×

சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை தின பூஜை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவனந்தபுரம்: பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடை திறக்கப்பட்டு ஒருநாள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இன்று இந்த ஆண்டின் பிரதிஷ்டை தினமாகும். இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள், தொடர்ந்து 25 கலசாபிஷேகம் நடந்தன.

பின்னர் இரவு 8 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். கேரளாவில் கொரோனா பரவல் குறையாததால், இம்முறை சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

Tags : Dedication Day ,Sabarimala Temple , Dedication Day Pooja at Sabarimala Temple: Devotees are not allowed
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு