×

சைதாப்பேட்டையில் 130 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 130 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் சிறப்பு  மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.

அந்தவகையில், நேற்று ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் 130 ஆக்சிஜன் படுக்கைகளை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, இன்று காலை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 130 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த மையத்தில் 130 மருத்துவ படுக்கைகளிலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், மின்விசிறிகள், நாடித்துடிப்பு அளவிடும் கருவிகள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Tags : Covit Care Center ,Saitapate, ,Stalin , Chief Minister MK Stalin inaugurated the Govt Care Center with 130 oxygen beds in Saidapet
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...