×

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் ரூ.6.62 கோடி மோசடி: கோவை அதிமுக பிரமுகரிடம் விசாரிக்க போலீசார் திட்டம்

கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் வேலை வாங்கி தருவதாக ₹6.62 கோடி ேமாசடி செய்த விவகாரத்தில் கோைவ அதிமுக பிரமுகரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டையை சேர்ந்தவர் பிரகாசம் (47). அதிமுக பிரமுகர். இவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம்  புகார் மனுவை அனுப்பி வைத்தார்.அதில், ‘‘முன்னாள் அதிமுக  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு உதவியாளராக செயல்பட்டேன். தேர்தல் செலவுக்காக ரூ.80 லட்சம் பலரிடமும் வாங்கி கொடுத்தேன்.

 மேலும், அரசு துறைகளில் குறிப்பாக தொழிலாளர் நலத்துறை வக்பு வாரியம் உட்பட  பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக நிலோபர் கபில் சொன்னதன்பேரில் சிலர் காசோலைகளாக என்னிடம் பணம் கொடுத்தனர். அந்த பணம் கபிலிடம் சேர்க்கப்பட்டது. ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. பணம்  கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை திருப்பி கேட்டு வருகின்றனர். எனவே நிலோபர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.6.62 கோடியை பெற்றுத்தர வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் இந்த புகாரை கொடுத்தார்.

அமைச்சரின் இந்த மோசடி விவகாரத்தில் கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தரும் புரோக்கராக நீண்டகாலம் செயல்பட்டு வருவதாக  தெரியவந்துள்ளது. சில காலம் அரசு போக்குவரத்து கழகத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.‌ போக்குவரத்து சங்கம் மற்றும் பல்வேறு பதவிகளில் ஆதிக்கம் செலுத்திய இவர் அரசு துறைகளில் ஆட்களை வேலைக்கு சேர்த்துவிட்டு பெரும் சொத்து  குவித்துள்ளதாக தெரிகிறது. இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி அமைச்சரின் வேலைவாய்ப்பு மோசடி மற்றும் பல்வேறு மோசடி விவகாரங்கள் குறித்து தகவல்களை சேகரிக்க  திட்டமிட்டுள்ளனர்.‌



Tags : Former minister ,Nilofar Kapil ,Coimbatore ,AIADMK , Former minister Nilofar Kapil scam worth Rs 6.62 crore: Coimbatore AIADMK
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...