முழு ஊரடங்கிற்கு வணிகர் சங்கம் ஒத்துழைப்பு...விக்கிரமராஜா பேட்டி

சென்னை: ஒருவார காலம் முழு ஊரடங்கு குறித்த தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.  இதுகுறித்து, சென்னை தலைமை செயலகத்தில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:   கடைகளுக்குள் முகக்கவசம் அணியாத யாரையும் வியாபாரிகள் அனுமதிக்கக்கூடாது. கடைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வார காலம் முழு ஊரடங்கில் காய்கறிகளை அரசே விநியோகம் செய்யும் என  முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கும் எங்களின் முழு ஆதரவை தெரிவித்துள்ளோம். முழு ஊரடங்கை கடைபிடிக்க பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும்  போர்கால நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவை தருகிறோம். அரசுக்கு தேவையான காய்கறி, பால் , தண்ணீர் விநியோகத்திற்கு முழு ஒத்துழைப்பை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>