×

தெற்கு ரயில்வே அறிவிப்பு: யாஸ் புயல் காரணமாக 22 சிறப்பு ரயில் ரத்து

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: யாஸ் புயல் காரணமாக தற்காலிகமாக 22 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சாலிமார் ரயில் (வண்டி எண் 02659) 23ம் தேதி (இன்று) ரத்து செய்யப்படுகிறது. சாலிமார்-நாகர்கோவில் (02660) 26ம் தேதியும்,  ஹவுரா- கன்னியாகுமரி (02665) ரயில் 24ம் தேதி, ஹவுரா-சென்னை சென்ட்ரல் ரயில் 24, 25, 26ம் தேதியும், சென்னை சென்ட்ரல்- ஹவுரா (02822) 24,25, 26ம் தேதியும், சாலிமார்- திருவனந்தபுரம் (02642) 25ம் தேதி, எர்ணாகுளம்-பாட்னா  ரயில் (02643) 24, 25ம் தேதியும், பாட்னா- எர்ணாகுளம் ரயில் (02644) 27, 28ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, திருச்சி- ஹவுரா ரயில் (02664) 25ம் தேதி, ஹவுரா-திருச்சி ரயில் (02663) 27ம் தேதி, சந்திரகாச்சி- சென்னை சென்ட்ரல் ரயில் (02807) 25ம் தேதி, சென்னை சென்ட்ரல்- சந்திரகாச்சி ரயில் (02808) 27ம் தேதி, நியூ டின்சுகியா -  தாம்பரம் ரயில் (05930) 24ம் தேதி, தாம்பரம்- நியூ டின்சுகியா ரயில் (05929) 27ம் தேதி, ஜெசியா-தாம்பரம் ரயில் (02376), தாம்பரம்- ெஜசியா ரயில் (02375) 29ம் தேதி, திருவனந்தபுரம்- சில்ஜார் ரயில் (02507) 25ம் தேதி, சென்னை  சென்ட்ரல்- நியூஜல்பைகுரி (02611) 26ம் தேதி, நியூஜல்பைகுரி- சென்னை சென்ட்ரல் ரயில் (02612) 28ம் தேதி, புவனேஸ்வர்- சென்னை சென்ட்ரல் ரயில் (02839) 27ம் தேதி, சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வர் ரயில் (02840) 28ம் தேதி,  புதுச்சேரி- ஹவுரா ரயில் (02868) 26ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Southern Railway ,Yas storm , Southern Railway announces cancellation of 22 special trains due to Yas storm
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்