×

ஜெனீவா ஓபன் பைனலில் டெனிஸ் - கேஸ்பர் பலப்பரீட்சை

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவுடன் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் மோதுகிறார். அரை இறுதியில் உருகுவே வீரர் பாப்லோ கியூவஸுடன் மோதிய டெனிஸ் ஷபோவலோவ் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்திய பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஸ்பெயினின் பாப்லோ அந்துஜாரை எதிர்கொண்ட  கேஸ்பர் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2வது சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த அந்துஜார் அரை இறுதியுடன் வெளியேறினார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் டெனிஸ் - கேஸ்பர் மோதுகின்றனர்.


Tags : Denise - ,Geneva Open Final , Denise - Caspar Multiplier at Geneva Open Final
× RELATED மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அமெரிக்க நடிகை மரணம்