×

400 ஆம்னி பஸ்கள் இயக்கம்

சென்னை: ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக 400 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் அன்பழகன்
கூறியதாவது: ஊரடங்கை தொடர்ந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

மேலும் நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு  வசதியாக 2 நாள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதியும் மற்றும் தமிழக அரசின் உத்தரவையும் ஏற்றும் தமிழகத்துக்குள் ஆம்னி பஸ்கள்  இயக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு மொத்தமாக சேர்த்து 400 பஸ்கள் வரை இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Operation of 400 Omni buses
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...