×

முன்னாள் அதிமுக அமைச்சர் நீலோபர் கபில் வேலை வாங்கி தருவதாக ரூ.6.62 கோடி ஏமாற்றியதாக கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளர் புகார்

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ரூ.6.62 கோடி மோசடி செய்துள்ளதாக அவரின் உதவியாளராக இருந்த பிரகாசம் என்பவர் டிஜிபி அலுவகத்தில் ஆன்லைன் மூலம் புகார்  அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளித்தார். பின்னர் உதவியாளர் பிரகாசம் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சரின்  உதவியாளராக கடந்த 5 வருடங்கள் இருந்தேன். அப்போது சிலர் வேலை சம்பந்தமாகவும், டெண்டர் விஷயமாகவும் அமைச்சரை பார்க்க வருவார்கள். அப்போது அமைச்சர் என்னை பார்க்க சொல்வார்கள்.

இந்நிலையில் அமைச்சர் அதுசம்பந்தமாக என்னிடம் கூறுவார். அதை அவர்களிடம் கூறுவேன். அதற்கு அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ அதை வாங்கி அமைச்சரின் உறவினர்களிடம் பணத்தை கொடுத்துவிடுவேன்.  அதைப்போன்று கடந்த 5 வருடமாக ஈடுபட்டு வந்தேன்.அவர்களிடம் வேலை ெசய்வதால் வேலையாட்கள் என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்நிலையில் கொரோனா தொற்றினால் நினைத்தது போன்று வேலை வாங்கி தர  முடியவில்லை. அதனால் பணம் கொடுத்தவர்கள் அழுத்தம் தர ஆரம்பித்தனர். அப்போது முன்னாடி பணம் கொடுத்த நபர்கள் கேட்கும் போது அப்போது தருபவர்களிடம் வாங்கி கொடுத்தோம்.

அதன்பிறகு கட்சியில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க ஆரம்பித்தனர். அப்போது அவர்களுடைய உறவினர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் மறுபடியும் நம்முடைய ஆட்சி  வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினர்.  அதன்பிறகு தேர்தலில் சீட் இல்லை என்று தெரிந்தவுடன் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை கேட்க ஆரம்பித்தனர். அதன்பிறகு அவர்களின் நடவடிக்கை சரியில்லாமல் என்னை ஒதுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் பணம்  கொடுத்தவர்கள் என்னை வீட்டில் வந்து மிரட்ட ஆரம்பித்தனர். இதனால் நான் மனஉளைச்சலில் உள்ளேன். தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஏற்பட்டுள்ளோம். அமைச்சர் சொல்வதை செய்தேன். இடையில் கேட்ட போது சொத்துகளை  விற்று தருவதாக கூறினார்கள். தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதால் எனக்கு அழுத்தம் அதிகமாகிவிட்டது. ஏற்கனவே ஆன்லைன் மூலம் 12ம் தேதி புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,minister ,Nilopar Kapil , Former AIADMK minister Nilopar Kapil has been accused of embezzling Rs 6.62 crore to get a job.
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...