சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவ மழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 22 ஆம் தேதி அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags : Tamil Nadu ,Meteorological Inspection Centre ,Chennai ,Salem ,Kallakkurichi ,Tiruvannamalai ,Thirupathur ,Vellore ,Ranippet ,Meteorological Centre ,Dinakaran ,