×

பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட்டில் புஜாராவின் தடுப்பாட்டம் தான் இந்தியா வெல்ல காரணம்: ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மார்க்ஸ் ஹாரிஸ் பேட்டி

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20, 3 ஒன்டே மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. இதில், பிரிஸ்பேனில் நடந்தகடைசி டெஸ்ட்டில் கடைசி நாளில் ரிஷப் பன்ட் ஆட்டம் இழக்காமல் 89 ரன் எடுத்ததால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதனால் ரிஷப் பன்ட்டிற்கு பாராட்டுகள் குவிந்தது. இந்த டெஸ்ட்டில் புஜாரா 2வது இன்னிங்சில் 211 பந்துகளை தாக்குப்பிடித்து ஆடி 56 ரன் எடுத்தார். உடலில் பல அடிகளை வாங்கிக்கொண்டு போராடினார். இந்நிலையில், அந்த டெஸ்ட்டில் வெற்றிக்கு ரிஷப் பன்ட்டை விட புஜாரா தான் முக்கிய காரணம் என அந்த டெஸ்ட்டில் ஆடிய ஆஸி. தொடக்க வீரரான மார்க்ஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அந்த டெஸ்ட்டில் இறுதி நாள் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இந்திய அணியினர் வெற்றி ரன்களுக்குச் செல்வார்களா இல்லையா என்று நாங்கள் நாள் முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் ரிஷப் சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்று நினைக்கிறேன். ஆனால் புஜாரா ஒரு முழுமையான தடுப்பாட்டத்தை ஆடி ஒரு ஆஸ்திரேலியரைப் போல பேட் செய்தார். எல்லாவற்றையும் மார்பில் எடுத்துக்கொண்டு அதைப் பெற்றார். அணியின் மற்றவர்கள் அவரைச் சுற்றி பேட் செய்தனர். இதனால் தான் வெற்றி சாத்தியமானது. ரிஷப் இன்னிங்ஸ் நம்பமுடியாதது. எல்லோரும் அவரிடம் மந்திரம் இருப்பதாக கூறுகிறார்கள். அவர் அதை ஒரு சில முறை காட்டியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்தது ஏமாற்றமளித்தது, என்றார்.

Tags : Pujara ,Brisbane ,India ,Marks Harris , Pujara's tackle in last Test in Brisbane is why India won: Interview with Australian opener Marx Harris
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...