×

அதிக சிக்சர் அடிப்பதால் பயனில்லை: கோஹ்லி ஆட்டத்த பார்த்து கத்துக்கொள்..! மொயின்கான் மகனுக்கு முகமதுயூசுப் அட்வைஸ்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மொயின்கான். இவரது மகன் அசாம் கான் முதல்தர போட்டிகள், பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். விரைவில் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவருக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனைக் குறைத்தால் மட்டுமே தேசிய அணியில் இடம் கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமதுயூசுப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “முதல்தரப் போட்டி, பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் அசாம் கானின் ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். அபாரமாக ஆடுகிறார். கவர் டிரைவ், ஆன் டிரைவ் ஷாட்களை இளம் வயதிலேயே துல்லியமாக விளையாடுவது ஆச்சரியம்தான். இதுதொடர்பாக அவர் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.

விராட் கோஹ்லி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன் போன்றவர்கள் விளையாடுவதை அவர் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும். அப்போதுதான் நிறைய நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதிக சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து விளையாடுவது தவறு. அணிக்குத் தேவையான நேரத்தில்தான் சிக்ஸர்கள் அடிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் தூக்கியடிக்க நினைத்தால் அது சரிப்பட்டு வராது. கேட்ச் ஆகி அவுட் ஆகும் நிலை ஏற்படும். இதனால், அணிக்குப் பெரிய சங்கடம் உருவாகலாம். இதன் காரணமாக, அணியில் இடம் கிடைக்காமலும் போகலாம். இதனை அசாம் கான் மனதில் வைத்து செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.



Tags : Kohli ,Mohammad Yusuf ,Moinkan , No use hitting too many sixes: Watch Kohli play and shout ..! Mohammad Yusuf's advice to Moinkan's son
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு