எமிலியா ரோமாக்னா ஓபன் டென்னிஸ்: கோகா காப்-கியாங் வாங் பைனலில் இன்று மோதல்

பார்மா: இத்தாலியின் பார்மா நகரில் எமிலியா ரோமாக்னா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தது. முதல் அரையிறுதியில், 3ம் நிலை வீராங்கனையான 17 வயது அமெரிக்காவின் கோகா காப், 25 வயதான செக்குடியரசின் கேத்ரினா சினியகோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை கோகா காப் 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் வீறு கொண்டு எழுந்த சினியகோவா 6-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சுதாரித்து ஆடிய கோகா காப் 6-2 என கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரையிறுதியில், 6ம் நிலை வீராங்கனையான 29 வயது சீனாவின் கியாங் வாங், 2017ம் ஆண்டு யுஎஸ் சாம்பியனான 28 வயதான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-2 என கியாங்வாங் எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டில் கடும் போட்டி நிலவியது. டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டையும் 7(7) - 6(3) என கியாங்வாங் கைப்பற்றினார். இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பைனலில் கோகோ காப்- கியாங் வாங் மோதுகின்றனர்.

Related Stories:

More
>