×

அமெரிக்காவை தொடர்ந்து 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக ஃபிரான்ஸ் அறிவிப்பு..!!

பாரிஸ்: அமெரிக்காவை அடுத்து பிரான்சும் தேவைக்கு அதிகமாக இருக்கும் தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்களிடம் மிகுதியாக உள்ள 9 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.


இந்நிலையில், இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.  இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்ததாவது, உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் தயாராக இருக்கிறது. 


தடுப்பூசி விநியோகத்தில் ஆப்பிரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்க நாங்கள் திட்டமிட்டு வருகின்றோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரான்ஸ் தன்னிடம் தேவைக்கு அதிகமாக உள்ள சுமார் 3 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் என தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டார். கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் நோக்கில் வளர்ந்த நாடுகள் பலவும், கொரோனா தடுப்பூசிகளை வாங்கி குவித்து வருகின்றன. 


இதனால் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து WHO கோவாக்ஸ் அமைப்பு, வல்லரசு நாடுகளிடம் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து ஏழை நாடுகளுக்கு விநியோகம் செய்து வருகிறது.



Tags : France ,US , 3 crore corona vaccine, world country, France
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...