×

முழு ஊரடங்கு நீட்டிப்பா: மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க  அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19  மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனையானது நடைபெற்றது. கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனை முடிந்துள்ள நிலையில் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 


அப்போது, பேசிய முதலமைச்சர், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் வரவில்லை. மக்களின் பாதுகாப்பிற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இது விடுமுறைக்காலம் அல்ல., கொரோனா காலம். பொதுமக்கள் இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தளர்வுகள் அற்ற ஊரடங்கு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.



Tags : State Medical Expert Panel , Full Curfew, Extension, Government, Medical Expert Panel, Recommendation
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...