×

யாஷ் புயல் எதிரொலி: 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ் புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் ஷாலிமார் சிறப்பு ரயிர் மே 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷாலிமார் நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 26 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுரா கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே 24 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுரா சென்னை சிறப்பு ரயில் மே 24 முதலட மே 26 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. யாஷ் புயல் மே 22 ஆம் தேதி வங்க விரிகுடாவில் உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் 25ம் தீவிரமாகி, மே 26 மாலை வடமேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரைகளை அடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. 


வளிமண்டல மற்றும் கடல் நிலைமைகள், வெப்பச்சலனத்திற்கு உகந்த சூழல் மற்றும் கடல் மேற்பப்பின் வெப்பநிலை  போன்றவை காரணமாக அந்தமான் கடல் மற்றும் கிழக்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் அருகிலுள்ள பகுதிகளில் மே 22ம் தேதி முதல் மேகமூட்டத்திற்கு சாதகமான சூழல் உருவாகிறது. மே 25 ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் மிக தீவிரமான கனமழை பெய்யும் என கூறியுள்ளது.



Tags : Yash ,Southern Railway , Yash storm, 12 special train, canceled, Southern Railway
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...