×

தொடர்ந்து 2-வது நாளாக லடாக்கில் இன்றும் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6-ஆக பதிவு

லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 8.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த நிலநடுக்கமானது ரிட்கர் அளவு கோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது. மேலும் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எந்த சேதமும் எற்படவில்லை என கூறப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து எந்த ஒரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கம் குறித்து கட்டிடங்கள் உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறினார்.  




Tags : Ladakh , 2nd day, Ladakh, earthquake: 3.6 on the Richter scale
× RELATED பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக...