×

பஞ்சாப்பில் மிக்-21 விமானம் விபத்து: விமானி பலி

புதுடெல்லி:  பஞ்சாப்பில் விமானப்படைக்கு சொந்தமான  மிக் 21 போர் விமானம் நேற்று காலை விபத்துக்குள்ளானது. இதில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தில் விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 போர் விமானம் நேற்று முன்தினம்  இரவு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த விமான அபினவ் சவுத்ரி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மிக் 21 விமானம் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.

கடந்த ஜனவரியில் ராஜஸ்தானின் சுரத்கரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது. மார்ச்சில் நடந்த விபத்தில் விமானப்படை குழு கேப்டன் விமான பயிற்சியின்போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Punjab , Mic-21 plane crash in Punjab: Pilot killed
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...