×

உலக சுகாதார நிறுவனம் தகவல்: கொரோனா மரணங்கள் 3 மடங்கு அதிகம் இருக்கும்: 60-80 லட்சம் என மதிப்பீடு

ஜெனீவா: உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விட கொரோனா மரணங்கள் 3 மடங்கு அதிகம் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 34 லட்சம் பேர் பலியாகி இருப்பதாக உலக நாடுகளின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவர ஆண்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கடந்த 2020ம் ஆண்டிலேயே கொரோனா மரணங்கள் குறைந்தபட்சம் 30 லட்சமாக இருந்திருக்கும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் 12 லட்சம் மரணங்கள் கூடுதலாக இருக்கும். நேரடியாக, மறைமுகமாகவோ கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. தற்போது அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ள 34 லட்சத்தை விட 2, 3 மடங்கு இறப்புகள் அதிகமாக இருக்கும்.

அதன்படி பார்த்தால், 60-80 லட்சம் மரணங்கள் கொரோனாவால் நிகழ்ந்திருக்கலாம். இந்த எண்ணிக்கையானது மறைக்கப்பட்ட மரணங்கள், மருத்துவ வசதி இல்லாததால், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நிகழ்ந்த மரணங்களை உள்ளடக்கியது’ என கூறப்பட்டுள்ளது.

Tags : World Health Organization , World Health Organization data: Corona deaths are 3 times higher: estimated at 60-80 lakhs
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...