புயல் எச்சரிக்கை 11 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: தலைமை செயலகத்தில் நேற்று காணொலி காட்சி வாயிலாக கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கால நடவடிக்கைகள் மற்றும் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து 11 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கொரோனா பரவலை மேலும் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிப்பது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு, தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories:

>