×

ஆன்லைனில் ஊட்டி மலர் கண்காட்சி

ஊட்டி:  மே மாதம் 2வது வாரத்திற்கு மேல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த மலர் கண்காட்சியை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால்  மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கும்  தடை விதிக்கப்பட்டது. இதனால், மலர் அலங்காரங்களை யாரும் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனை ெதாடர்ந்து மலர் அலங்காரங்களை அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் இணையதளம் வாயிலாக வீடியோ வெளியிடப்பட்டது. இதனை அனைத்து மக்களும் கண்டு ரசித்தனர். இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு காரணமாக மலர் கண்காட்சி நடத்தப்படாததால், இணைய வழியில் (ஆன்-லைன்) அனைத்து மக்களும் மலர் அலங்காரங்களை காணும் வகையில் ேதாட்டக்கலைத்துறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலியை அமைச்சர் ராமசந்திரன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, நீலகிரி கலக்டர் இன்னசென்ட் திவ்யா உடனிருந்தார்.


Tags : Ooty Flower , Ooty Flower Exhibition Online
× RELATED மே 20ல் ஊட்டி மலர் கண்காட்சி; மே 7, 8ல்...