×

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 1,156 நெல் மூட்டைகள் விற்பனை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 1,156 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு லாலாப்பேட்டை, சோளிங்கர், பொன்னை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 1,156 நெல் மூட்டைகள், 2,220 கிலோ கேழ்வரகை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

இந்த நிலையில் நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விலை விவரம் பின்வருமாறு: ஏடிடி 37 வகை நெல் குறைந்தபட்ச விலை ரூ756 க்கும் அதிகபட்சம் ரூ.966க்கும், கோ 45 குறைந்தபட்ச விலை ரூ941க்கும், அதிகபட்ச விலை ரூ957க்கும், கோ 51 வகை நெல் குறைந்தபட்ச விலை ரூ917க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ976க்கும், அன்னம் நெல் வகை குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ933க்கும், சோனா நெல் வகை குறைந்த பட்ச விலை ரூ700க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ1179க்கும் விற்பனையானது. மேலும் கேழ்வரகு 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை ₹2,220க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் குடோன்கள் நிரம்பியதால் வெளியே வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழை பெய்தால் நனையாமல் இருக்க உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.



Tags : Ammoor Regulatory Store , 1,156 bundles of paddy sold at Ammoor Regulatory Store
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது