×

மாஜி வீராங்கனையின் தாய்க்கு கொரோனா: சிகிச்சைக்காக கோலி ரூ6.77 லட்சம் உதவி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக ஒரு இயக்கத்தை தொடங்கினர். மேலும் அவர்கள் 2 கோடி நன்கொடை அளித்தனர். இந்த இயக்கத்தின் மூலம் இதுவரை 11 கோடி ரூபாய் திரட்டி உள்ளனர். இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனை கே.எஸ்.கே.எஸ். ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார் எஸ்.கே. சுமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்காக விராட் கோலி ரூ.6.77 லட்சம் வழங்கி உள்ளார்.

தனது தாயார் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் தனக்கு உதவுமாறு பி.சி.சி.ஐ. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு ஸ்வரந்தி வேண்டுகோள் விடுத்த நிலையில் கோஹ்லி உதவி உள்ளார். கோலியின் இந்த செயலை இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் உள்பட பலரும் பாராட்டி உள்ளனர்.

Tags : Corona ,Goalie , Corona donates Rs 6.77 lakh to former player
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...