×

பல ஆண்களை காதல் திருமணம் செய்து பணம் பறித்த போலீஸ் கல்யாண ராணி-ஐதராபாத்தில் பரபரப்பு

திருமலை : ஐதராபாத்தில் பல ஆண்களை காதல் திருமணம் செய்து பணம் பறித்த பெண் போலீஸ் கல்யாண ராணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சந்தியா ராணி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், 2வது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் விவகாரத்து பெற்றார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே சந்தியா ராணி செம்ஷாபாத் மண்டலம், ஐதராபாத்தை சேர்ந்த சரண் தேஜ் என்பவரை காதலித்து தனது வலையில் விழ வைத்தார். ஆனால் சந்தியா ராணியுடன் சில மாதங்கள் பழகியதில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதும், பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும் சரண் தேஜிக்கு தெரியவந்தது.

இதனால், அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். ஆனால் சந்தியா ராணி திருமணம் செய்ய மறுத்ததால் இருவரும் சேர்ந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும், எஸ்சி எஸ்டி அட்ராசிட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டி குக்கட்பள்ளியில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து சந்தியா ராணி, சரண் தேஜை வேலைக்கு செல்ல விடாமல், கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்றும், தேவாலயத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஏற்க மறுத்த சரண் தேஜை, வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்து அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் சரண் தேஜ், சந்தியா ராணியின் பிடியிலிருந்து தப்பிக்க முடிவெடுத்தார்.

இதையடுத்து ஐதராபாத் காவல் துறை ஆணையருக்கும், செம்ஷாபாத் காவல் நிலைய வாட்ஸ் அப் எண்ணிற்கும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியா ராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சந்தியா ராணி மூலம் ஏமாற்றப்பட்டவர்கள் யாராவது இருந்தால் போலீசில் புகார் அளிக்கலாம் என காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதில் சந்தியா ராணி வசதியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து ஏமாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

மேலும், சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மோசடியில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சந்தியா ராணி பலரை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாக ஏற்கனவே ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் போலீஸ் கல்யாண ராணி கைதாகி இருப்பது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : queen-Hyderabad scandal , Thirumalai: Police have arrested a woman Kalyana Rani in Hyderabad for robbing several men of their love
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை