×

திருப்பத்தூர் குடியிருப்பு பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதை தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல்-போலீசார் சமரசம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் குடியிருப்பு பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதை தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இதனால் அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படும் என கூறி அப்பகுதி மக்கள் மற்றும் வழக்கறிஞர் தட்டி கேட்டதால் மருத்துவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அனுமந்த உபாசகர் நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது. அதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நுழைவாயிலில் ஒரு வீட்டில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் மருத்துவராக தியாகராஜன் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததால், மருத்துவ இணை இயக்குனர் ஆகியோர் மருத்துவமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மீண்டும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவியுள்ள நிலையில்,  தனியார் மருத்துவமனை மருத்துவர் தியாகராஜன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனை எதிரே கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் எச்சில் துப்பிக் கொண்டு இருந்தனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இந்தப் பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதியை சேர்ந்த சதீஷ்பாபு என்ற வழக்கறிஞரை அழைத்துக்கொண்டு மருத்துவர் தியாகராஜனிடம் தட்டி கேட்டனர். அப்போது மருத்துவர் தியாகராஜனுக்கும்,  வழக்கறிஞர் சதீஷ்பாபுவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த மருத்துவர், சதீஷ்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து உன்னை ஒழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சதீஷ்பாபு திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சதீஷ்பாபு டவுன் இன்ஸ்பெக்டர் தேவியிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தியாகராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தியாகராஜன் நடத்தும் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. ஆனால், அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்றால், உயிருக்கு போராடும் நிலையில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ளுமாறு கூறி அனுப்பி விடுவதாக அரசு மருத்துவர்கள் தியாகராஜன் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

புகாரை திரும்பப்பெற நிர்பந்திக்கும் டவுன் இன்ஸ்பெக்டர்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதை தட்டிகேட்டதற்கு, மருத்துவர் தியாகராஜன் தன்னை கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ்பாபு டவுன் இன்ஸ்பெக்டர் தேவியிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட தேவி, வழக்குப்பதிவு செய்யாமல், அளித்தபுகாரை மாலை நீங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இருவர் மீதும் நாங்கள் வழக்குப்பதிவு செய்வோம் என்று சதீஷ்பாபுவை நிர்பந்தித்து வருவதாக தெரிகிறது.

Tags : Tiruthur , Tirupati: A man who threatened to kill a coroner in a residential area of Tirupati has been threatened with death.
× RELATED திருப்பத்தூரில் சமூக இடைவெளியை...