தீவிரமடையும் வைரஸ் பரவல்!: நாகர்கோவில் அரசு கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பு..!!

குமரி: நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகளுடன் புதிதாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நாகர்கோவில் அரசு கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவிட் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஓரிரு நாட்களில் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 1,280க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் மரணமடைந்தனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 604 பேர், கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் 2,200 பேர், வீட்டு தனிமைப்படுத்தலில் 3,068 பேர் என 6 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

More