×

தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு  ஆலோசனை நடத்துகிறார். மே 10-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் அனைத்து காட்சிகளை சார்ந்த சட்டமன்ற பிரதிநிதிகள் 13 பேர், மற்றும் குழு உறுப்பினர்களிடம் 11.30 மணியளவில் ஆலோசனை நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர்களுடன் தற்போது மாவட்ட ரீதியாக எவ்வாறான பாதிப்புகள் இருக்கிறது, அங்கு மேற்கொள்ள படும் நடவடிக்கைகள்  குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் மேற்கொள்ளபடும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் தற்போது கொரோனா 2-ம் அலையில் தொற்றின் வீரியம் அதிகரித்து இருக்கிறது, அதனுடைய அறிகுறிகளில் மாற்றம் காணப்பட்டுள்ளது.

தற்போது தடுப்பூசி போடும் பணிகளிலும் தமிழக அரசு தீவிரம் காட்டியுள்ளது. மேலும் 18 முதல் 45 வயதானவர்களுக்கும் தடுப்பூசி  திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். தற்போது கொரோனா பதிப்பவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளன, ஆக்சிஜன் பற்றாக்குறை மேலும் அடுத்தடுத்த மருத்துவம் சார்ந்த விஷயங்களில் எவ்வாறாக கவனம் செலுத்தம் வேண்டும் என்பன குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்துதான் மருத்துவ நிபுணர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதற்குப்பின்பாக மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் ஊரடங்கை அமல்படுத்தப்டுவதில் உள்ள சிக்கல்கள், கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

வரும் 24-ம் தேதியுடம் ஊரடங்கு முடிவடையும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழகஅரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது, அதன் அடிப்படையில் தான் இந்த ஆலோசனைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Committee of Medical Professionals ,Tamil Nadu ,Q. ,Stalin , Corona Vaccine, Central Government, DMK Parliamentary Committee Chairman
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...