×

இந்திய மகளிர் அணியின் முதல் பகல்/இரவு டெஸ்ட்: இந்தாண்டு ஆஸியுடன் மோதல்

மும்பை: இந்திய  மகளிர் அணியின் முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில்  நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ெஜய் ஷா தெரிவித்துள்ளார். டி20,  ஒருநாள் போட்டிகளை போல் டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களை ஈர்க்க பல்வேறு  முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இளஞ்சிவப்பு பந்தில்  நடத்தப்படும் பகல்/இரவு டெஸ்ட் போட்டிகள். இந்திய ஆடவர் அணி 2019ம் ஆண்டு வங்கதேசத்துடன் முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.  தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் பகல் இரவு டெஸ்ட்  போட்டிகளில் மோதியது.

இப்போது இந்திய மகளிர் அணியும் பகல்/இரவு  டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இது குறித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா  நேற்று, ‘ இந்திய மகளிர் அணி இந்த ஆண்டு இறுதிக்குள்  ஆஸ்திரேலியாவில் இளம்சிவப்பு பந்து  பகல்/இரவு டெஸ்ட் போட்டியில்  விளையாடும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி தங்களின் முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. கூடவே உத்தேச போட்டி அட்டவணையும் வெளியாகி உள்ளது.

 இது கிரிக்கெட் உலகில் மகிளிர் அணிகள் விளையாடப்போகும் 2வது பகல்/இரவு டெஸ்ட் போட்டியாகும்.  ஏற்கனவே 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மகளிர் அணிகள்  பகல்/டெஸ்ட் ஆட்டத்தில்  விளையாடி உள்ளன.
இந்திய அணி ஜூன், ஜூலை மாதங்களில்  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறது. பின்னர்  செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா  செல்கிறது. அங்கு  தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்களிலும், செப்.30ம் தேதி ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா விளையாடுகிறது.



Tags : Indian women ,team ,Aussies , Indian women's first day / night Test: Clash against Aussies this year
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா