நளினி, முருகன் பரோல் மனு நிராகரிப்பு

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில்,  முருகன் தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு காரியம் நடத்த 30 நாட்கள் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தார்.

அதேபோல் மாமனாரின் நினைவு காரியம் நிகழ்ச்சியில் பங்கேற்க 30 நாட்கள் பரோல் கேட்டு நளினியும் டிஐஜி ஜெயபாரதியிடம் மனு அளித்தார். இந்த மனுக்களை பாதுகாப்பு காரணங்களுக்காக டிஐஜி நிராகரித்து விட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>