×

கொரோனாவுக்கு பலி காவல்துறையினர் 36 பேருக்கு தலா ரூ.25 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த காவல்துறையை சேர்ந்த மேலும் 36 பேருக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதத்தில் அரசுத் துறையை சார்ந்த அலுவலர்கள் தீவிரப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பணியின் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.  முக்கியமாக தமிழக காவல் துறையில் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 நபர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்து விட்டார்கள். இதுவரை தங்கள் இன்னுயிரினை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு  தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9 கோடியினை நிவாரண தொகையாக வழங்க தமிழக முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான  முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Corona ,Chief Minister ,MK Stalin , Rs 25 lakh each for 36 policemen killed in Corona: Chief Minister MK Stalin's order
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...