×

4,320 சதுர கிமீ பரப்பளவு கொண்ட உலகின் பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவில் உடைந்தது: வெப்பமயமாதலின் விளைவா?

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவில் உடைந்துள்ளது. இந்த பனிப்பாறை 4,320 சதுர கிமீ பரப்பளவு கொண்டது.  பூமி கோளத்தில் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா முழுவதும் பனி பாறைகளால் நிரம்பி உள்ளன. உலக வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக பனிபாறைகள் உருகியும், அவை உடைந்து சிதறியும் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.  இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், அண்டார்டிகாவின் ரோன்னில் பனிப்படிவ அடுக்கில் 4,320 சதுர கிமீ பரப்பளவு கொண்ட ராட்சத பனிபாறை ஒன்று உடைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

சேட்டிலைட் புகைப்படங்கள் மூலமாக இந்த பனிப்பாறை  உடைந்திருப்பது தெரியவந்தள்ளது. ஏ-76 என பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறை விரல் போன்ற அமைப்பை கொண்டுள்ளது. இதன் நீளம் 170 கிமீ என்றும், அகலம் 25 கிமீ என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த பனிப்பாறை நியூயார்க் நகரின் லாங்க் தீவை விட பெரியது, அர்ஜென்டினாவின் பியர்டோ ரிகோ நகரத்தின் பாதி அளவுக்கானது என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.  உலக வெப்பமயமாதல் காரணமாக கடந்த அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பனிப்பாறைகள் உருகுவதால், 1880 ஆம் ஆண்டிலிருந்து  சராசரியாக கடல் நீர் மட்டம் சுமார் ஒன்பது அங்குலம் உயர்ந்துள்ளது.   எனவே, சர்வதேச அளவில் கடல் நீர் மட்டம் உயர்வதை தடுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்ற தடுப்பு இலக்குகள் போதுமானதாக இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். அதே சமயம், இவ்வாறு பனிப்பாறைகள் உடைவது இயற்கையானது என்றும், இதையும் புவி வெப்பமயமாதலையும் தொடர்பு படுத்த முடியாது என்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

கடந்த ஆண்டும் உடைந்த பாறை

கடந்த ஆண்டு அண்டார்டிகாவின் ஏ-68 பனிப்பாறை உடைந்து தெற்கு ஜார்ஜியா தீவை மோதும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், அந்த பனிப்பாறை பிரிந்து துண்டுகளாக உடைந்து நீரில் கரைந்தது. இந்த பனிப்பாறை 4,200  சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்போது இந்த பனிப்பாறையை விட பெரிதானதாக ஏ-76 சாதனை படைத்துள்ளது.

Tags : Antarctica , The world's largest glacier with an area of 4,320 sq km has broken in Antarctica: the result of global warming?
× RELATED உலகின் மிகப்பெரிய பனிப்பாறை A23-a:...