×

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த 36 காவலர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கொரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்புப் பணியில் பணியாற்றியபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பங்களில் முதற்கட்டமாக 36 குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் விதத்தில் அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் பணியின் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழக காவல் துறையில் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 நபர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துவிட்டார்கள்.

இதுவரை தங்கள் இன்னுயிரினை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்குத் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9 கோடியை நிவாரணத் தொகையாக வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Q. Stalin , Rs 25 lakh financial assistance to 36 families of policemen killed in Corona blockade: Chief Minister MK Stalin orders
× RELATED அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள்,...