×

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2018ல் அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியுள்ளதையும்- அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர் அவர்களுக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி 19.5.2021 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள்.

உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து – ஏழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் ” என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,President ,Ramnath Govind ,Perarivalan ,Nalini , 7 Chief Minister MK Stalin's letter to President Ramnath Govind on the issue of Tamil liberation!
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...