×

ஆவடி அரசு மருத்துவமனைக்கு 8 செறிவூட்டிகள், 15 மெத்தைகள்: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடி அரசு பொது மருத்துவமனையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் முயற்சியால், 50 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே நேரு பஜார் நகை வியாபாரிகள் சங்கம் சார்பில், ரூ.4 லட்சம் மதிப்பில்  8 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் ரூ.3 லட்சம் மதிப்பில் 15 கட்டில் மற்றும் மெத்தைகளும் நன்கொடையாக  வழங்கினர். இந்த பொருட்களை அமைச்சர் நாசர் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதன்பிறகு ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் வீடு தோறும் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி குறித்து 385 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர், மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இதையடுத்து ஆவடி வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்று மகளிர் சுய உதவி குழுவினருக்கு  காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தனர். அப்போது, பொதுமக்கள் கோரிக்கை ஏற்று சுகாதார சீர்கேட்டை உருவாக்கிய குப்பை கிடங்கு அங்கிருந்து அப்புறப்படுத்திட உத்தரவிட்டனர். இதன்பின்னர் மகளிர் விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அமைச்சர் நாசர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நன்றியும் பாராட்டையும் தெரிவித்தனர்.

இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறோம். நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிப்பது, அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா தொற்றுதொடர்பாக தீவிர தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறோம். 3வது தொற்று அலை வந்தாலும், அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளது’’ என்றார். அப்போது மாநகராட்சி ஆணையர் நாராயணன், ஆவடி தாசில்தார் செல்வம், ஆவடி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் காவலன், மாநகராட்சி சுகாதார அலுவலர் ஜாபர், ஆவடி தெற்கு மாநகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,BC. ,Nassar , 8 concentrators, 15 mattresses for Avadi Government Hospital: Minister Samu Nasser presented
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...