×

மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி; கொரோனா நோயின் பக்க விளைவுகள் என மருத்துவர்கள் விளக்கம்

மதுரை: மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றின் பக்க விளைவுகள் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறினர். கருப்பு பூஞ்சை அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, கேரளாவில் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்த கருப்பு பூஞ்சை தொற்று தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. 


கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis என்ற பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர். இவ்வகை கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது. சென்னை மற்றும் தமிழகத்தில் வெகு சில இடங்களில் அரிதாக காணப்பட்டு வந்த இந்த பாதிப்பு , தற்போது நாடு முழுக்க கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது என மருத்துவர்கள் கூறினர்.



Tags : Maduro , Madurai, for 50 people, black fungus, sure
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...