ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பஹாடியா கொரோனாவால் உயிரிழப்பு: மோடி ட்வீட்டரில் இரங்கல்

டெல்லி: ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பஹாடியா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். 89 வயதான ஜெகநாத் பஹாடியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகநாத் பஹாடியா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் ஸ்ரீ ஜெகந்நாத் பகாடியா ஜி மறைந்ததில் வருத்தம். 

தனது நீண்ட அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில், மேலும் சமூக வலுவூட்டலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என பிரதமர் இரங்கலை தெரிவித்தார். ஜெகநாத் பஹாடியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் மாநிலத்தில் 1 நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>