கறுப்பு பூஞ்சை நோய் பெருந்தொற்றாக அறிவிப்பு: ராஜஸ்தான் அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குவது அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கறுப்பு பூஞ்சை நோயை சமாளிப்பதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தெலங்கானாவில் அரசு குழுவின் பரிந்துரையின்றி ஆம்டோடெரிசின்   மருந்தை விற்பனை செய்யக்கூடாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரியானாவில் இந்த கறுப்பு பூஞ்சையானது  முன்னறிவிக்கப்பட்ட நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உளள் எந்தவொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒரு நோயாளிக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மருத்துவ தலைமை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இதைதத் தொடர்ந்து தற்போது கறுப்பு பூஞ்சை பெருந்தொற்று நோயாக ராஜஸ்தான் மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது. கறுப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஆம்போடெரிசின் மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த மருந்து சப்ளை செய்பவர்கள் கண்டறிப்பட்டுள்ளதாகவும், ஒதுக்கீட்டில் மருந்துகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>