அடுத்து வருகிறது யாஷ் புயல்

புதுடெல்லி: டவ்தே புயல் ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக யாஷ் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவின் அறிக்கையில், ‘வங்கக் கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அடுத்த 72 மணி நேரத்தில் அது வலுப்பெற்று, வடக்குமேற்காக நகரும். வரும் 26ம் தேதி மாலை மேற்கு வங்கம்  ஒடிசா கடலோரப் பகுதியில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இப்புயலுக்கு யாஷ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலால் ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுளளது.

Related Stories:

>