×

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே ஆஷஸ் தொடர் அறிவிப்பு

சிட்னி: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் பராம்பரிய ஆஷஸ்(சாம்பல்) ெதாடர் உட்பட ஆஸி ஆடவர், மகளிர் அணிகள் பங்கேற்கும் 2021-22 ஆண்டுக்கான சர்வதேச  போட்டி அட்டவணையை  ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கமான ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா(சிஏ)’  நேற்று வெளியிட்டது. மொத்தம் 5 டெஸ்ட் ஆட்டங்களை ெகாண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்  டிசம்பர் 8ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்குகிறது.
தொடர்ந்து 2வது டெஸ்ட்   டிச 16ம் தேதி பகல்/இரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்டு நகரில் தொடங்கும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் விளையாடப்படும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியாக 3வது டெஸ்ட்,  மெல்போர்னில் டிச.26ம் தேதி ஆரம்பிக்கும். தொடர்ந்து 4வது டெஸ்ட் சிட்னியில் ஜன.5ம் தேதியும், 5வது டெஸ்ட் ஜன.14ம் தேதி பெர்த் நகரிலும் நடக்கும்.

மகளிர் ஆஷஸ் தொடர்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் ஆஷஸ் தொடருக்கான அட்டவணையையும் சிஏ ெவளியிட்டுள்ளது. அதன்படி இரு அணிகளும் மோதும் ஒரே ஒரு டெஸ்ட்  போட்டி கான்பராவில் ஜன.27ம் தேதி தொடங்கும். கூடவே இந்த 2 அணிகளும் விளையாடும் தலா 3  டி20, ஒருநாள்  ஆட்டங்கள் கொண்ட தொடர்கள் பிப்.4ம் தேதி முதல் பிப்.19ம் ேததி வரை நடைபெற  உள்ளன.

நியூசிலாந்து, இலங்கை...
ஆஸ்திரேலியாவில் 2020 அக்டோபரில் தொடங்க உள்ள  ஐசிசி டி20 உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்யும் வகையில் நியூசிலாந்து, இலங்கை நாடுகளுடன் மோதும் போட்டி விவரங்களும் வெளியாகி உள்ளன. நியூசிலாந்துடன்   3 ஒருநாள், ஒரு டி20 ஆட்டங்கள் ஜன.30 முதல்  பிப்.8ம் தேதி வரை ஆஸியில் நடைபெறும். அதேபோல்  இலங்கையுடனான 5 ஆட்டங்களை ெகாண்ட டி20 தொடர் பிப்.11 முதல் பிப்.20ம் தேதி வரை ஆஸியில் நடக்கும்.

முதல்முறையாக...
கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட  ஆஸி-ஆப்கானிஸ்தான் இடையிலான  சிவப்பு பந்து பகல்/இரவு டெஸ்ட்  ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நவ.27ம் தேதி ெதாடங்கும். இது இந்த இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ெடஸ்ட் போட்டியாகும்.

பிசிசிஐ ஆலோசனை
ெகாரோனா ெதாற்று பரவி வரும் நிலையில் வரவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்து ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. அதற்காக மே 29ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை பிசிசிஐ கூட்டுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு  பிசிசிஐ ெசயலாளர் ஜெய் ஷா நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

துபாய் போகணும்..
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வரும் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் விரைவில் துபாய் செல்கிறார். அங்கு மே 24ம் தேதி தொடங்கும் ‘ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் பங்கேற்பது, ஒலிம்பிக் போட்டிக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்’ என மேரி கூறியுள்ளார்.

சரியான பாதையில்
‘சமீபகாலத்தில் நாங்கள் விளையாடிய ஆட்டங்களில் முடிவுகள், நாங்கள் ஒலிம்பிக் போட்டியை நோக்கி சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உறுதி செய்கின்றன’ என்று ஹாக்கி வீரர் சுமீத் தெரிவித்துள்ளார்.

ஏன் டிவில்லியர்ஸ்?
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ‘டிவில்லியர்ஸ் விலகியதற்கான காரணங்களை நான் மதிக்கிறேன். அவர் மீண்டும் அணியில் இணைய விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

Tags : Australia ,England , Announcement of the Ashes series between Australia and England
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...