×

உலக கோப்பை தகுதிச்சுற்று கத்தார் சென்றது இந்திய அணி

டெல்லி: உலககோப்பை  தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட சுனில் சேட்ரி தலைமையி 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி நேற்று கத்தார் புறப்பட்டுச் சென்றது. உலக  கோப்பை  கால்பந்து போட்டி  அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம்  கத்தாரில்  நடைபெற  உள்ளது. அதற்கான ஆசிய நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப்  போட்டிகள் 2019ல் தொடங்கின. கொரோனா பரவல் காரணமாக 2ம் கட்ட போட்டிகள்  தள்ளி வைக்கப்பட்டன.இந்நிலையில்  தள்ளி வைக்கப்பட்ட ஆட்டங்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற உள்ளன. ஈ  பிரிவில் உள்ள இந்திய அணி   ஜூன் 3ம் தேதி  கத்தாரையும், ஜூன் 7ம் தேதி வங்கதேசத்தையும், ஜூன்  15ம் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. அதற்காக  சுனில் சேட்ரி தலைமையிலான 28 பேர் கொண்ட இந்திய அணி நேற்று மாலை கத்தார்  புறப்பட்டுச் சென்றது. பயணத்திற்கு முன்னதாக தனிமையில் வைக்கப்பட்ட  அணியினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பயணத்திற்கு  முன்னதாக பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், ‘இப்போது சூழ்நிலை  சரியில்லை. கொரோனா காரணமாக இம்மாத தொடக்கத்தில் கொல்கத்தா நகரில் நடைபெற  இருந்த பயிற்சி முகாம் ரத்தானது. அதனால் துபாயில் நடைபெற வேண்டிய  நட்புரீதியிலான போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது, அதனால்,  நீலப்  புலிகள் ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு தீவிரமான பயிற்சிகளில்  ஈடுபடுவார்கள்’ என்றார் அணி விவரம்: சுனில்(கேப்டன்),  குர்பிரீத், அம்ரீந்தர், தீரஜ்(கோல் கீப்பர்கள்),  பிரிதம், ராகுல்,  நரேந்தர், சிங்லென்சனா,  சந்தேஷ், மார்டின், அடில்கான், ஆகாஷ், சுபாஷிஷ்,  உதந்தா, பிராண்டன், லிஸ்டன், ரோவ்லின், அனிருத், பிரனோய், சுரேஷ்,   லலேங்மாயா, அப்துல், யாசிர், சங்கட்டே, பிபின், ஆஷிக், இஷான், மன்வீர்

Tags : Indian ,Qatar ,World Cup , The Indian team went to Qatar to qualify for the World Cup
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...