×

கி.ராஜநாராயணனுக்கு அரசு சார்பில் மரியாதை, மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்புக்கு வைகோ நன்றி

சென்னை: கரிசல் இலக்கியத்தின் தந்தை, ராஜநாராயணன் இறுதிச் சடங்குகளின்போது அரசின் சார்பில் மரியாதை அளித்தது. அவருக்கு சிலை நிறுவி, மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் வட்டார வழக்குச் சொற்களை இலக்கியத்தில் அறிமுகம் செய்து, ஒரு புதிய எழுத்து நடையை ஆக்கியவர், கரிசல் இலக்கியத்தின் தந்தை, ராஜநாராயணன். அவரது இறுதிச் சடங்குகளின்போது, தமிழ்நாட்டு அரசின் சார்பில் மரியாதை அளித்துச் சிறப்பித்ததற்கும், கோவில்பட்டியில் அவருக்கு சிலை நிறுவி, மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்ததற்காகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்னர்கள் மணிமுடி தரித்துக்கொள்வார்கள். புலவர்கள் வாழ்த்துப் பா பாடுவார்கள். இந்த மக்கள் ஆட்சிக் காலத்தில், பள்ளிக்கூடமே போகாமல், ஏழை எளிய மக்களின் உணர்வுகளை எழுத்தில் வடித்த ஒரு எழுத்தாளனுக்கு, அரசு சிறப்பு செய்து இருக்கிறது. புதுவை பல்கலைக்கழகம், மதிப்புறு பேராசிரியராக ஆக்கி அழகு பார்த்தது. இலக்கியவாதிகளுக்கு, அரசு மரியாதை செய்யும் வழக்கத்தை தமிழக முதலமைச்சர் ஏற்படுத்தி இருப்பது, இலக்கிய துறையினருக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும், பெருமகிழ்ச்சி அளித்து இருக்கிறது. அதற்காக, முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : K. Rajanarayanan ,Manimandapam ,Vaiko ,Chief Minister , Respect on behalf of the Government to K. Rajanarayanan, Manimandapam: Vaiko thanks the Chief Minister for the announcement
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...