புதுவையில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை நெருங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று புதிதாக 1,759 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நடுத்தர வயதினர் உட்பட 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 9,007 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 23 பேர், காரைக்காலில் 5 பேர், மாகேவில் ஒருவர் என 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,241 ஆகவும், இறப்பு விகிதம் 1.39 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related Stories: