×

இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டு ஆகலாம்: சீரம் நிறுவன தலைவர் தகவல்

புனே: இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என்று  சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனாவாலா கூறினார். நாடு முழுவதும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்தும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியின் தொகுப்பு ஐதராபாத் வந்துள்ள நிலையில் வரும் சில நாட்களில், இந்த தடுப்பூசியும் பயன்பாடுக்கு வரவுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 18,44,53,149 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 4,20,24,922 பேருக்கு இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டனர்.

இதற்கிடையே தடுப்பூசி சப்ளை தொடர்பாக சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனாவாலா கூறுகையில், ‘இந்தியாவின் மக்கள் தொகையைக் கணக்கில்கொண்டால் அனைவருக்கும் தடுப்பூசி போட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் தடுப்பூசி போடுவது இயலாத காரியம். கடந்த ஜனவரியில் இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து கொண்டு இருந்தது. அதே நேரத்தில் அப்போது தான் தடுப்பூசி ேபாடும் பணியும் நமது நாட்டில் தொடங்கி இருந்தது. அதனால் தடுப்பூசி தேவையுள்ள நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்தோம். அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பது சவாலான காரியம்’ என்றார்.

Tags : India ,Serum Company , It can take up to 3 years to vaccinate everyone in India: Serum Company President Information
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...