×

கொரோனாவில் இருந்தும் மீண்ட நிலையில் பாஜக மாஜி எம்பி மரணம்

ஜம்மு: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பாஜக முன்னாள் எம்பி, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜம்முவில் இறந்தார். ஜம்முவில் வசிக்கும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பேராசிரியர் சாமன் லால் குப்தாவுக்கு (87) கடந்த 5ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர், சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பினார். ஆனால், அடுத்த ஒரு சில நாட்களில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாமன் லால் குப்தா, 1996ம் ஆண்டில் உதம்பூர்-தோடா-கதுவா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், 1998, 1999ம் ஆண்டுகளில் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 - 2001 காலகட்டத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமாகவும் இருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

Tags : Corona , Former BJP MP dies while recovering from Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...